கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழக ஏற்பாட்டில் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் உருமாற்றுச் செயற்குழு ஆதரவுடன் ‘நல்லெண்ண விருந்து’ கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாள் : 20 ஜூலை 2023 (வியாழன்)
நேரம்: மாலை மணி 7.00
இடம் : சரஸ்வதி
தமிழ்ப்பள்ளி
நோக்கம்
1. . கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் 5 ஆண்டு இலக்கு (2023 – 2028) வெற்றி அடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
2. . கெடா
மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி, புறப்பாடம், பண்புகளில் சிறந்து விளங்க நடவடிக்கைகளை
மேற்கொள்ளுதல்
3. .தரமான
நிர்வாகம், பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
4. மாணவர்கள்
தேசிய & உலகளாவிய நிலையில் விளையாட்டில் சாதனை புரிய விளையாட்டு மையத்தை உருவாக்கிப்
பயிற்சிகள் வழங்குதல்
5. கெடா
மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டு மன்றம், தலைமையாசிரியர் கழகத்துடனான ஒற்றுமையை
வலுப்படுத்தி புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி நற்சூழலை உருவாக்க பயிற்சிகள் வழங்குதல்
6. தமிழ்ப்பள்ளிகளில்
பணிபுரியும் அனைவரிடத்திலும் ஒற்றுமை கலாச்சாரத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்
7. ஒரே தமிழ்ப்பள்ளி என்ற உணர்வை மேலோங்கச் செய்து தமிழ்ப்பள்ளிகளின் அடைவுநிலையை உயர்த்துதல்
கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் 5 ஆண்டு கால இலக்கு ( 2023 – 2028 )
1. கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்று நூல் வெளியீடு
2. பணி இட மாற்றம் & துறை சார்ந்த ஆசிரியர்கள் நியமனம்
3. மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல்
4. பள்ளியின் நில அந்தஸ்தை அடையாளம் காணுதல்
5. விவேக நிர்வாகத்தை உருவாக்குதல்
6. கூட்டு நிறுவனங்களோடு கட்டமைப்பு பின்னலை ஏற்படுத்துதல்
7. கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டு மன்றம் & தலைமையாசிரியர் கழகத்தின் பொறுப்பை ஒருங்கிணைத்தல்
8. விளையாட்டு மையத்தை உருவாக்குதல்
9. மெய்நிகர் கிடங்கு
10.ஒற்றுமை கலாச்சாரத்தை ஏற்படுத்துதல்
11.தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளி விரிவாக்கம்
12.தமிழ்ப்பள்ளி ஆதரவு குழு அமைத்தல்
நல்லெண்ண
விருந்திற்கு ஆதரவு வழங்க விரும்புவோர் கீழ்க்கண்ட தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொண்டு
அழைப்பு கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
கோத்தா
ஸ்டார் – திருமதி கோ.சாந்தி தேவி( ஜாபி தமிழ்ப்பள்ளி )
குபாங்
பாசு – திருமதி நா.சுபாசினி ( டாருலாமான் தமிழ்ப்பள்ளி )
லங்காவி
– திரு வடிவேலு ( சுங்கை ராயா தமிழ்ப்பள்ளி )
கோல
மூடா/யான் – திருமதி பெ.புவனேஸ்வரி ( ஆர்வாட் பிரிவு 1 தமிழ்ப்பள்ளி )
கூலிம்
- திரு விஸ்வலிங்கம் ( பாகான் செனா தமிழ்ப்பள்ளி )
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.