Expand The Future வருங்காலத்தை விரிவாக்கு

Thursday, 4 May 2023


இன்று 4.5.2023 இந்துக்கள் வைகாசி விசாகம் என்றும் பெளத்தர்கள் விசாக திருநாள் என்றும் கொண்டாடி மகிழ்கிறோம்.

புத்தர் கூறிய அறிவுரை... மந்திரமானது!

#################
புத்தம் சரணம் கச்சாமி
 தம்மம் சரணம் கச்சாமி
 சங்கம் சரணம் கச்சாமி
################

புத்தம் சரணம் கச்சாமி என்றால்
 புத்தம் என்றால் புத்தி, அறிவு, ஞானம். ஒவ்வொருவரும் உள்ளத்தைப் பகுத்து, ஆராய்ந்து, உய்த்து அறிந்து அதன் மூலம் அறியும் அறிவில் சரண் புக வேண்டும் என்பதே புத்தர் சொன்ன புத்தம் சரணம் கச்சாமி.

தம்மம் சரணம் கச்சாமி என்றால்...

 தம்மம் என்றால் சத்தியம் அறவழி ஒழுக்கம். ஒவ்வொருவரும் தனது புத்தியால் உய்த்து, ஆராய்ந்து அறிந்த பகுத்தறிவால் எது சத்தியம் என்று உணர்கிறார்களோ அந்த சத்தியத்தில் சரண் புகுங்கள் என்கிறார். எதையும் ஆராய்ந்து அறிந்து உண்மை சத்தியம் என்று உன் அறிவுக்கு பட்டால் அதை ஏற்றுக்கொள் அதில் சரண் புகு என்கிறார்.

சங்கம் சரணம் கச்சாமி என்றால்

 சங்கம் சரணம் கச்சாமி என்றால் சங்கத்தின் பண்புகளை பிக்குகளின் பண்புகளை என்னுள் வளர்த்து அந்த பண்புகளில் சரண் புகுகிறேன் என்று அர்த்தம். ஒழுக்கம், அறிவு, அன்பு, கருணை, முதித்தா, சகிப்புத்தன்மை, தியாகம், சத்தியம் எனும் சங்கத்தினற்க்காண உயர்ந்த பண்புகளிடம் சரண் புகுவதே சங்கம் சரணம் கச்சாமி. தீய பண்புகளிடம் சரண் புகாமல் நற்பண்புகளிடம் சரண் புகுவதே சங்கம் சரணம் கச்சாமி.

வெற்றிக்கு... நல்ல புரிதல், நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல பேச்சு, நல்ல எண்ணம், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல நோக்கம் வேண்டும்!


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

KARNIVAL BAHASA TAMIL SEKOLAH RENDAH DAN SEKOLAH MENENGAH PERINGKAT NEGERI KEDAH TAHUN 2025 PADA 13/07/2025 (AHAD) DI SJK(T) TAMAN KELADI DA...